கத்தாரிலுள்ள விமான நிலைய அதிகாரிகள் அங்குள்ள குளியலறையிலிருந்து குழந்தை ஒன்றை கண்டுபிடித்ததையடுத்து விமான நிலையத்திலிருந்த ஏராளமான பெண்கள் நிர்வாண சோதனைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாக விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டின் தலைநகரமாக தோஹா விளங்குகிறது. இந்த தோஹாவிலுள்ள தேசிய விமான நிறுவனத்திலிருக்கும் குளியலறையிலிருந்து குழந்தை ஒன்றை அங்கு பணிபுரியும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
அவ்வாறு விமான நிலையத்திலுள்ள குளியறையிலிருந்து குழந்தை கண்டறியப்பட்டதையடுத்து அங்குள்ள அதிகாரிகள் விமான நிலையத்திலிருந்த 13 ஆஸ்திரிய பெண்கள் உட்பட பலரையும் நிர்வாணமாக சோதனை செய்துள்ளார்கள்.
இதுதொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்கள் குழு கத்தார் நாட்டின் அதிகாரிகளின் மீதும், தலைநகர் தோஹாவிலுள்ள தேசிய விமான நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்கள்.