கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஒடிஷா பிற மாநிலங்களையும் வழிகாட்டும் வகையில் திகழ்கிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலுக்கினாக பல்வேறு மாநில அரசுக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. தங்கள் மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை , திரையரங்கம் மூடல் , பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கு அனுமதி மறுப்பு என்ன பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகின்றன.
ஒடிசா மாநில அரசு , வெளிநாட்டினருக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒடிசா வரும் வெளிநாட்டினர் தங்களின் வருகை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் வெளிநாட்டினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள். தனிமைபடுத்தப்படும் வெளிநாட்டினருக்கு ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் வழங்கப்படும்.
பெயர் விவரங்களை பதிவு செய்ய தவறினால் குற்றமாக கருதப்படும் எனவும் ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு ரூ 15000 வழங்கி பிற மாநிலங்களுக்கே வழிகாட்டியாக ஒடிஷா திகழ்கிறது.