உலக முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டிலிருந்தபடியே அனைத்தையும் செய்து வருகின்றனர். இதையடுத்து உணவுகளை கூட ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். அப்போது டெலிவரி செய்யப்பட்ட உணவோடு சேர்த்து ஒரு பாட்டிலில் சிறுநீரை அடைத்து அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நிறுவனத்தின் பெயருடன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுநீர் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அதோடு அந்த நிறுவனத்தின் பெயரான “ஹலோ பிரஷ் யூகே எதற்காக யாரோ ஒருவருடைய சிறுநீரை எனக்கு அனுப்பி வைத்து இருக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அந்நிறுவனம் ஏதோ தவறு நடந்து விட்டது நாங்கள் பொதுவாக பார்சலோடு தண்ணீர் பாட்டில் அனுப்புவதில்லை என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்பவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.