பிரான்ஸ் நாட்டில் உலக நாடுகளின் தலைவர்களின் சமையல்காரர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து, மொனாக்கோ, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களின் தலைமை சமையல்காரர்கள் பாரீஸில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் தங்களது நாட்டு உணவு வகைகள் குறித்து இந்த சமையல்காரர்கள் சந்திப்பில் பரஸ்பர தகவலை பகிர்ந்து கொள்வர்.
அதோடு மட்டுமில்லாமல் பிரான்ஸ் நாட்டு உணவு வகைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சமையல்காரர்கள் அரசியல் மக்களை பிரித்தாலும் உணவு அனைவரையும் ஒன்றாக்கும் ஒன்றாக உள்ளது என்று கூறுகின்றனர்.