குஷ்புவின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. ‘சின்னத்தம்பி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். சமீபத்தில், சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ”அண்ணாத்த” திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில், இவர் உடல் எடையை குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், தற்போது இவரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் பலர், ”குஷ்பு இளம் நடிகையாகவே மாறிவிட்டார்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.