திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது.
வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. இதனால் உடல் நலத்திற்கு தீங்கு விளையும். இதனை தடுத்துநிறுத்தி உணவுத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.