அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கென்று அமைக்கப்பட்ட நீர் பூங்காவில் ரசாயனக் கசிவு உருவாகி 60 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஸ்பிரிங் என்ற பகுதியில் குழந்தைகள் விளையாடுவதற்காகவே நீர்பூங்கா இருக்கிறது. தற்போது, இப்பூங்காவில் திடீரென்று ரசாயன கசிவு உருவானது. இதில் 60 நபர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சுவாசக்கோளாறுகளும் தோல் எரிச்சல் பாதிப்பும் உண்டானது.
இது குறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பூங்காவிற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்டர்கள். அதில் 26 நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 39 நபர்கள் சிகிச்சைக்கு மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பிறகு பூங்கா உடனடியாக அடைக்கப்பட்டது.