Categories
தேசிய செய்திகள்

ரசாயன முறையில் “ஆண்மை நீக்கம்”… அவசர சட்டத்திற்கு ஒப்புதல்… பாகிஸ்தான் அரசு அதிரடி..!!

பாலியல் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது .

பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டத்துக்கு அந்நாட்டு அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதனையடுத்து பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் நோக்கில், குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. மேலும் பாகிஸ்த்தான்  சட்டத்தின்படி பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செயல்படுவது, ஆசைக்கு இணங்காதபோது வற்புறுத்தி பாலியல் செய்வது, உயிருக்கு அச்சுறுத்தலை விளைவித்து பாலியலில் ஈடுபடுவது, 16 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் பாலியல் உறவு கொள்வது போன்றவை சட்டவிரோதமாக கருதப்படும். மேலும், குற்றவாளிக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும்

Categories

Tech |