செம்மண் கடத்திய 2 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் பகுதியில் அனுமதியின்றி மண் எடுத்துச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் 2 டிப்பர் லாரிகளிலும் செம்மண் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் அனுமதி சீட்டு உள்ளதா என கேட்ட போது இல்லை என தெரிவித்துவிட்டு அங்கிருந்து டிரைவர்கள் தப்பி ஓடினர். இதனையடுத்து காவல்துறையினர் டிப்பர் லாரியில் இருந்த 2 1\2 யூனிட் செம்மண்ணை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டிரைவர் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.