சட்டவிரோதமாக டிராக்டரில் செம்மண் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணபேரி பகுதியில் வந்த டிராக்டரை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் டிராக்டரில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிராக்டர் டிரைவரான கண்டுகொண்டான் மாணிக்கம் பகுதியில் வசிக்கும் கருப்பசாமி என்பவரை கைது செய்து அவர் கடத்தி வந்த மணலுடன் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மேலும் டிராக்டர் உரிமையாளரான வெள்ளையன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.