செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்திற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டில் மேலும் 330 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,139 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.. இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,113 ஆக அதிகரித்துள்ளது.. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..