செங்கல்பட்டில் மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் அங்கு இருந்து வருபவர்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே இருகிறது. நேற்று வரை 1,537 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 678 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 844 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் செங்கல்பட்டில் இன்று மேலும் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,615 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா அதிகம் பாதித்த முதல் 15 மாவட்டங்களில் செங்கல்பட்டு இடம் பிடித்துள்ளது. இதுவரை சென்னை மட்டும் பட்டியலில் இருந்த நிலையில் செங்கல்பட்டும் சேர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.