செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 197 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 6355 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். 3023 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் 3220 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 111 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்கள். இன்று மேலும் 197 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6552 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம் தாலுக்காவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது.
மாவட்டத்தில் அதிகப்படியாக 600க்கு மேற்பட்ட பாதிப்பு பல்லாவரம் நகராட்சியில் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தாம்பரம் நகராட்சியில் 460க்கும் மேற்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள பேரூராட்சிகளில் பெருங்களத்தூர், சிட்லபாக்கம் போன்ற பேரூராட்சி பகுதியிலும் அதிக பாதிப்பு இருக்கிறது. ஊராட்சி ஒன்றியப் பகுதிகளிலும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது நகராட்சி பகுதிகளில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்திலுள்ள பெருங்களத்தூர், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 18 பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
பரங்கிமலை ஊராட்சி பகுதிகளில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை நோயை தடுப்பதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல நோய் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 6 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.