சென்னையின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக அளவில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனா பாதிக்கப்படாத இடங்களே இல்லை. அதாவது,
சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள். இதில் முதலில் எட்டு மண்டலங்களில் மட்டும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. நேற்றையதினம் 14 மண்டலங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று காலை கடைசி மண்டலமான,
மணலியிலும் கொரோனா பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.