Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை… இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். நேற்று மட்டும் சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்திருந்தது.

நேற்று வரை பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் நேற்றுவரை மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 529 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |