Categories
சென்னை திருச்சி திருவண்ணாமலை மாநில செய்திகள் ராமநாதபுரம்

சென்னை 3… திருச்சி 1… ராமநாதபுரம் 1 … திருவண்ணாமலை 1… பரவும் கொரோனா ….!!

நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் 6 பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக சொல்லப்படுகின்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் இதுவரை 304 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வமாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவைப் பொருத்தவரை பார்த்தோமானால் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது.அவர்கள் இருவருமே கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அந்த மாநில அரசு சார்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கடுத்து தமிழகத்தில் பார்த்தோமானால் , இதுவரை 6 பேர் கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில் 3 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள். மற்ற மூவரில்  ஒருவர் திருச்சியில் இருக்கிறார். இன்னொருவர் ராமநாதபுரத்தில் , மற்றொருவர் திருவண்ணாமலையிலும் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இது தவிர்த்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்னும் ஏழு பேர் கண்காணிப்பில் உள்ளனர். சீனாவில் இருந்து வந்தவர்களோடு வந்தவர்கள் என்பதால் தீவிரமான கண்காணிப்பில் உட்படுத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கபட்டு வருகிறார்கள்.

உலக சுகாதார நிறுவனம் இந்த வைரஸ் தாக்கத்தால் சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. அதன் காரணமாகவே உலகம் முழுவதுமே இந்த நோயைப் பற்றிய பெரும் அச்சம் பரவி இருக்கிறது. குறிப்பாக மத்திய , மாநில அரசுகளை பொருத்தவரையில் மக்கள் பயப்பட வேண்டாம் என்பதை தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றார்கள்.

தமிழகத்திலுள்ள சுகாதாரத்துறை சார்பில் கூட முதலில் யாரும் பயப்படாதீங்க.  காய்ச்சல் , சளி , இருமல் , தும்மல் , தொண்டைவலி உள்ளிட்ட எந்த பாதிப்பாவது உங்களுக்கு இருந்தால் முதலில் நீங்க அருகாமையில் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகுங்கள். ஒரு நாளைக்கு 10 லிருந்து 15 முறை கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுங்கள்.

இந்த வைரஸ்ஸை பொருத்தவரை இது காற்றின் மூலமாக பரவக்கூடியது.அதேபோல தொடுதல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. அதனால முதல்ல தன் சுத்தம் முக்கியம் அப்படிங்கிறது தொடர்ச்சியாக வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள். சற்று நேரத்துக்கு முன்னதாக கூட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய முகநூல் பதிவில் ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

Categories

Tech |