Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…. “மறு அறிவிப்பு வரும் வரைகட்டாயம்” மீறினால் நடவடிக்கை…. அதிரடி அறிவிப்பு..!!

நிவர் புயல் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை பிரதான சாலைகள் மூடப்படுவதாக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 

அதி தீவிர புயலாக மாறிய நிவர் புயலால் சென்னை மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த புயல் காரணமாக, செம்பரம்பாக்கம் அணை உள்ளிட்ட பல்வேறு அணைகள் முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் மதகுகளை திறந்து விடப்பட்டதாலும், தொடர் கனமழையாலும் சென்னையில் முக்கிய சாலைகள் பல வெள்ளப்பெருக்காக காட்சியளிக்கின்றன. இதன் காரணமாக,

பாதுகாப்பு கருதி, சென்னையில் பிரதான சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளது. அதன்படி, எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் எனவும், மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. 

Categories

Tech |