சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவரும், சமூக சேவகருமான மருத்துவர் சாந்தா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நோயாளிகளுக்கு தாயாக இருந்து பணியாற்றி அவரின் மறைவு ஈடு செய்ய முடியாதது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் மருத்துவமனையில் தலைவராக பணியாற்றியவர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பணியிலும், இவர் முன்னோடியாக கருதப்படுகிறார். மூச்சுத்திணறல் காரணமாக இன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மறைவிற்கு பிரதமர் மோடி தனது ட்விட்டர் மூலம் இரங்கலை தெரிவித்துள்ளார்.இதில் அவர் புற்றுநோய் சிகிச்சைக்காக பாடுபட்ட சாந்தா என்றும் நினைவிகூறப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.