சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.
இதனால் கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் 4 நாள் முழு ஊரடங்கு இன்றுடன் நிறைவதைக்கிறது. இதனால் நாளை முதல் பழைய ஊரடங்கு முறையே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என்றும் மே 1ம் தேதி முதல் வழக்கம் போல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்தாகவும் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் நிதானமாக சமூக இடைவெளியை கடைபிடித்து பொருட்களை வாங்க வேண்டும். வெளியே வரும்போது முக கவசம் அணிந்து வரவும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.