கொரோனா தொற்றில் இருந்து மீண்ட சசிகலா வரும் 7ஆம் தேதி பெங்களூரில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்ட சசிகலா கடந்த 4 ஆண்டுகளாக கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் இருந்தார். கடந்த 27ஆம் தேதி அவர் விடுதலையானார். ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவருக்கு கொரோனா உறுதியானது. இதனை அடுத்து அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜனவரி 31ஆம் தேதி இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதனிடையில் அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுத்து வருகிறார். இளவரசி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து ஏழாம் தேதி இளவரசி விடுதலை ஆனதும் அவருடன் சேர்ந்த சசிகலா சென்னை வருவார் என தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி தர்மயுத்தம் நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். நான்கு ஆண்டுகள் கழித்து அதே நாளில் சென்னை திரும்பி உள்ள சசிகலாவும் அதே திட்டத்தை கையில் எடுப்பார் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் ஜெயலலிதா பயன்படுத்திய காரிலேயே அவரும் சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.