Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா பாதித்த மூதாட்டி உயிரிழப்பு…. குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,526 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று 98 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை சென்னை டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர் ஒருவரின் தாயார் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

77 வயதான மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது குடும்ப உறுப்பினர் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் 176 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 1082 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சென்னையில் 33,819 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரு.வி.க நகர், ராயபுரம், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை , கோடம்பாக்கம் , அண்ணா நகர் என இந்த ஆறு மண்டலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |