சென்னையில் 373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 117 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரங்களை மண்டல வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் பகுதியில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மணலியில் ஒருவருக்கும், மாயவரத்தில் 3 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் 117 பேரும், திரு.வி.க நகரில் 46 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அம்பத்தூரில் ஒருவருக்கும், அண்ணாநகரில் 32 பேரும், தேனாம்பேட்டையில் 44 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 36 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வளசரவாக்கத்தில் 10 பேருக்கும், ஆலந்தூர், அடையாரில் 7 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. சோழிங்கநல்லூரில் 2 பேருக்கும் ஏற்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.