Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கொரோனா சித்த மருத்துவ மையங்களில் 5,788 பேர் குணமடைந்தனர்…!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 5,788 கொரோனா நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

சென்னை சாலிகிராமத்திலுள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்று வரும் சிகிச்சை மையத்தில், இதுவரை 4,903 சுபேர் அனுமதிக்கப்பட்டு அதில் 4,480 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 56 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினார். 66 பேர் புதிதாக கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 329 ஆண்கள், 94 பெண்கள் உட்பட 423 பேர் சிகிச்சையிலுள்ளனர்.

அதேபோல் வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை 1,470 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் 1,308 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினார். 101 ஆண்கள், 51 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 162 பேருக்கு தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

Categories

Tech |