Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,762 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 6,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள போதிலும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

இதனிடையே அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கட்டுள்ள நிலையில் கோயம்பேடு காய்கறி சந்தை மூலம் கொரோனா வைரஸ் பரவியதால் சந்தை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகரில் உள்ள 150 கடைகளை மூட சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். இன்று 2 மணி முதல் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மறுஉத்தரவு வரும் வரை கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களை தொடர்ந்து அண்ணா நகரிலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 6,330 பேர் குணமடைந்துள்ள நிலையில் 102 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |