Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3,000ஐ தாண்டிய சென்னை….! தலைநகரில் அட்டூழியம் செய்யும் கொரோனா ..!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 600 உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரமாரியாக உயர்ந்து கொண்டு செல்வது மக்களுக்கு அச்சம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் தமிழகத்தில் இன்று 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Vijayabaskar First Tamil Nadu Minister to Come Under CBI and IT ...

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எணிக்கை 6,000யை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்பாக 6,009ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 52 ஆய்வகங்கள் உள்ளன. இன்று 3 இறப்பு ஏற்பட்டதால் பலியானோர் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. மகராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் அதிக சோதனை செய்யப்பட்டுள்ளது. 405 ஆண்கள் , 195 பெண்கள் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எணிக்கையை கண்டு மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

தமிழகத்தில் இன்று ஒரே 13,980 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.68ஆக உள்ளது. நெல்லையில் ஒருவரும், சென்னையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை மட்டும் இன்று 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதால 3043ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |