சீனாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மருத்துவ மாணவி ஒருவர் மட்டுமே பயணம் செய்தது தெரிய வந்திருக்கிறது
சென்னையை சேர்ந்த மாணவி சீனாவில் மருத்துவம் பயின்று வருகின்றார். தியான்ஜின் நகரத்திலிருந்து விமானம் மூலமாக வியாழக்கிழமை தாயகம் திரும்பியுள்ளார். பல்வேறு விமான நிறுவனங்களும் சீனாவுடனான போக்குவரத்தை நிறுத்தி உள்ள நிலையில் அங்கிருந்து வந்த கடைசி நபர் இவராகத்தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. தியான ஜின்னிலிருந்து சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் இவர் ஒருவர் மட்டுமே பயணம் செய்திருக்கிறார். விமானத்தில் தான் மட்டுமே இருக்கும் புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். சீனாவிலிருந்து மருத்துவ சேவை ஆற்ற எம் வேலம் விரும்பியதாகவும் தங்களின் வற்புறுத்தலின் பேரில் தான் அவர் தாயகம் திரும்பியதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். விமானநிலையத்தில் முறையான மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டதாகவும் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.