Categories
தேசிய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றம் 75 உத்தரவுகள் பிறப்பிப்பு… 12 வாரங்களில் அமல்…!!

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான 75 உத்தரவுகள் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த உத்தரவு அனைத்தும் அடுத்த 12 வாரங்களில் அமல்படுத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களின் பட்டியலை தயாரித்து அவற்றில் நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்.

நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடமிருந்து பெறவேண்டிய வாடகை பாக்கியை வசூல் செய்யவேண்டும்.

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும்.

கோவில்களை பாதுகாக்க அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான நபர்களை நியமிக்க வேண்டும்.

சிலைகள், நகைகள் போன்ற புகைப்படம் எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிடவேண்டும்.

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை தமிழகஅரசு உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும்.

மத்திய சிலை கடத்தல் தடுப்பு பிரிவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 75 உத்தரவுகளை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Categories

Tech |