Categories
சினிமா தமிழ் சினிமா

“சென்னை ஐகோர்ட் ட்ரோன் மூலம் படப்பிடிப்பு”…. பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் அதிரடி கைது….. பெரும் பரபரப்பு….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின்  வெற்றியால் விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை தானே இயக்கி, நடித்து, இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிச்சைக்காரன் 2 படக்குழுவினர் சென்னை ஐகோர்ட் மற்றும் பார் கவுன்சில் போன்றவற்றை சட்டவிரோதமான முறையில் ட்ரோன் வைத்து படம் பிடித்துள்ளனர். இதனால் அனுமதியின்றி படம் பிடித்த பிச்சைக்காரன் படக்குழுவை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரும் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |