Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டாஸ்மாக்கை மூட உத்தரவிட முடியாது – ஐகோர்ட் அதிரடி.!!

டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது.. 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  தற்போது 7ஆம் கட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை அமலில் இருக்கிறது. இதனிடையே ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுபான கடைகள், பார்களை மூடுவது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால் அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை.. எனவே டாஸ்மாக்கை மூட உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது..

Categories

Tech |