Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீர்னு சொன்னா எங்கே போவோம்…. பரிதவிக்கும் ஐஐடி மாணவர்கள்….!!

இரண்டு நாட்களுக்குள் விடுதியில் இருக்கும் மாணவர்களை காலி செய்யக் கோரி சென்னை ஐஐடி தெரிவித்தது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரனோ பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கல்வி கற்க வந்த மாணவர்களும், தமிழகத்தில் பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு , ஊர்களுக்கு செல்ல முடியாமல் தமிழகத்திலேயே சிக்கி தவித்து வந்தனர். இவர்களுக்கு உதவும் விதமாக கட்டுமான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் வசதியை ஏற்படுத்தித் தந்தது.

மாணவர்களுக்கு ஒரு சில கல்வி நிறுவனங்கள் விடுதியில் தங்க வசதி அளித்து உதவி வந்தது. அதன்படி ஊரடங்கு முடியும் வரை மாணவர்கள் விடுதிகளில் தங்கிக் கொள்ளலாம் என சென்னை ஐஐடி தெரிவித்த நிலையில் திடீரென மாணவர்களை இரண்டு நாட்களுக்குள் விடுதியை காலி செய்ய சொல்லி சென்னை ஐஐடி நிறுவனம் வலியுறுத்தி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணமாக அங்குள்ள பேராசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்களை காலி செய்ய சொன்னதாக சென்னை ஐஐடி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சென்னை ஐஐடியில் பல்வேறு மாநிலங்களை மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் தற்போது தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |