சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் இடம்பெற 5,805 கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் சென்னைக்கு ஐஐடி-க்கு முதலிடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் ஐஐஎஸ்சி பெங்களூரு, மூன்றாவது இடத்தில் டெல்லி ஐஐடியும் இடம் பெற்றுள்ளது.
ஒவ்வொரு கல்லூரியும் கற்பித்தல், கற்றல் வளம், கற்பிப்போரின் வளம், ஆராய்ச்சி, ஒவ்வொரு ஆண்டும் கல்வி மையத்தில் இருந்து வெளிவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கை என சுமார் 9 பிரிவுகளின் கீழ் ஆய்வு செய்யப்பட்டு, 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்பதன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.