செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்ட ஒழுங்கு பார்த்தீர்கள் என்றால், மிக மிக மோசம். ஆளுங்கட்சியை சேர்ந்த ஜெயக்குமார் என்ற ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார், ஒரே நாளில் மூன்று கொலைகள். போரூரில் காரை கடத்தி ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள். இதுபோன்ற தினந்தோறும் கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, பலத்காரம் அது மட்டுமில்லாமல் மாணவ மாணவிகளின் மர்மமான மரணம்.
இது போன்று தமிழ்நாட்டில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. தமிழ்நாடு கொலையில் சிறந்த முதன்மையான மாநிலமாக சரித்திரம் படைச்சு இருக்கிறது. சட்ட ஒழுங்கு மிக மிக மோசம். மக்கள் வாழ முடியாத அளவிற்கு சட்ட ஒழுங்கு நிலைமை இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக கஞ்சா அதிகமாகிவிட்டது. அதுதான் நானும் சொன்னேன் துக்ளக் அரசாங்கம் என்று… ஒரு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு இரும்பு கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கணும். அதுதான் ஒரு ஆட்சியாளர்களுடைய முழுமையான கடமை. போலீஸ் படை இருக்கின்றது.
எல்லா விதமான தகவல்களையும் வாங்கி, எங்கெங்கெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சனையோ, அதேபோல கஞ்சா கடத்துவது, மற்ற போதை பொருள் கடத்துவதெல்லாம் இரும்பு கொண்டு அடக்கி, ஓடுக்கி தமிழ்நாடு போதை இல்லாத, கஞ்சா இல்லாத எந்தவிதமான போதை பொருள் இல்லாத மாநிலமாக கொண்டு வருவதற்கு கண்டிப்பாக முடியும்.
அந்த அளவிற்கு இன்றைக்கு நம்முடைய காவல்துறை முழுமையாக பயன்படுத்தி வேகப்படுத்தி, அதை இந்த வேலைக்காக பயன்படுத்தினால் கண்டிப்பாக நடக்கும். ஆனால் அதை செய்யாமல் ஏவல் துறையாக்கி எதிர்க்கட்சியை பழிவாங்க வேண்டும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பழிவாங்க வேண்டும் இந்த எண்ணத்தில் தான் காவல்துறை அதனுடைய திசையை மாற்றி விட்டிருக்கிறார்களே ஒழிய, சட்ட ஒழுங்கு பிரச்சனையை முழுமையாக சமாளித்து, ஒடுக்கி மக்களுக்கு ஒரு அமைதியை ஏற்படுத்தணும், போதை பொருளை ஒழிக்க வேண்டும் என்கின்ற எண்ணம் கொஞ்சம் கூட கிடையாது என தெரிவித்தார்.