Categories
தேசிய செய்திகள் பல்சுவை மாநில செய்திகள்

டெல்லியை விட சென்னையில் அதிகம்….. எகிறிய கேஸ் சிலிண்டர் விலை …!!

டெல்லியை காட்டிலும் சென்னையில் தான் சமையல் கேஸ் விலை உயர்ந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரு வருடத்திற்கு மானிய விலையில் 12 கேஸ் சிலிண்டர்களை நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. 12 சிலிண்டருக்கு மேல் ஒருவர் கூடுதலாக சிலிண்டரை வாங்க வேண்டுமென்றால் சந்தை விலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கின்றதோ அதற்கு ஏற்றார்போல பெட்ரோல் விலையும், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. அதன்படி சமையல் கேஸ் விலையும் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது நாடு முழுவதும் உள்ள சமையல் கேஸ் சிலிண்டர் விலை ஆனது 11.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த மே மாதம் சென்னையில் 569.50 விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை தற்போது 606.50 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே சிலிண்டர் விலை டெல்லியில் 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது உயர்த்திய விலை சென்னையில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |