Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கடைகள் மூடப்படும் என்றும் சென்னை மாநகராட்சியில் கோயம்பேடு சந்தை இயங்கும் எனவும் தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் கோயம்பேடு மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேருக்கு கொரோனா வந்தால் சந்தையை மூட வேண்டி வரும் என நேற்று காவல் ஆணையர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை கோயம்பேடு சந்தையில் நேற்றுவரை வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதனிடையே கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிவரும் 1,500 காய்கறி கடைகள், 850 பழ கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக சிறு மற்றும் மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் முத்துக்குமார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |