தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை கோயம்பேடு மேம்பாலம் பணிகளை செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக வீணாக காலம் கடத்தி வந்தனர். மேலும் ஒப்பந்த காலத்தில் பணிகளை முடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது எடப்பாடி ஆட்சி தான் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ வேலு குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் வருகின்ற அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். அதன் பிறகுஅந்த மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் வேளச்சேரி மேம்பாலம் இரண்டாம் அடுக்கு பணிகளும் இந்த மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.