Categories
மாநில செய்திகள்

சென்னையில் இனி குப்பைக் கொட்ட கட்டணம்… மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரையும், அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையும், கடைகளுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரையும், உணவகங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.3,000 வரையும் கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

அதே போல், பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.20,000 வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.4,000 வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3000 வரையிலும் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறி குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ.500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5000, கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ.2000 முதல் ரூ.5000, குப்பையை எரித்தால் ரூ.500 முதல் ரூ.2000 என அபராம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |