சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த ஆண்டு முழுவதும் அனைத்து நாடுகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு தற்போது சில மாதங்களுக்கு முன்பு வைரஸின் தாக்கம் குறைந்து இருப்பதால் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பல நாடுகளில் புது மரபணு மாற்றம் கொண்ட வைரஸ் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனடையில் தமிழகத்தில் ஒரே நாளில் 1385 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்படைந்தவர்களில் 1376 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சேர்ந்தவர்கள் 9பேர் எனவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது .ஆகையால் தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 868367 ஆக உயர்ந்துள்ளது மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7903 ஆக உள்ளது.
சென்னையில் மட்டும் இன்று ஒரேநாளில் 500 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சென்னையின் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையாக 241623 உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பிய அவர்களின் எண்ணிக்கை 659ஆகவும் இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 847139 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 5 பேர் அரசு மருத்துவமனையிலும் 5 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் இருந்துள்ளனர்.
இப்போதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12609 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிப்படைந்தவர்கள் ஆண்கள் 432777 பேர் எனவும் பெண்கள் 2 83 781பேர் எனவும் மேலும் வேறுபாலினத்தோர் 35 ஆக உயர்ந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது திடீரென வேகமாக மீண்டும் பரவிவரும் குறைவான பாதிப்பால் மக்கள் முன்னேச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் மாஸ்க் மற்றும் சமூக இடைவேளை என அனைத்தையும் சரியாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.