Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தலையில் விழுந்த இடி…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி முடிவு…. பரபரப்பு தகவல்…!!!

மாநகராட்சியின் அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேபோல்  தமிழக அரசு சொத்து வரி உயர்வு அறிவிப்பு தொடர்பான கருத்துக்களை மக்களிடம் கேட்கும் பணியை தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “மாநில உள்நாட்டு உற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மொத்தம் சராசரி வளர்ச்சி வீதம் அல்லது ஒவ்வொரு ஆண்டும் தற்போது உள்ள அடிப்படை தெருக்கட்டணம் 6% இதில் எது அதிகமாக உள்ளது அதன் அடிப்படையில் உயர்த்தப்படும். இவை அனைத்தும்  தற்போது மற்றும் புதிய மதிப்பீடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் நடைமுறை படுத்தப்படும். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இந்த அறிவிப்பில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் ஆணையர், பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, சென்னை 600003 என்ற முகவரிக்கு 30 நாட்களுக்குள் அனுப்பலாம்” என்று தெரிவித்துள்ளது

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி தற்போது தெரு கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு சொத்து வரியை நிர்ணயித்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் தெரு கட்டணம் உயர்த்தப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சொத்து வரியையும் உயரும் என்பதில் சென்னை மாநகராட்சி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் “சென்னைக்கு மட்டும் இல்லாமல் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குமே இது பொருந்தும்” என்று தெரிவித்தனர்.

Categories

Tech |