சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் தென் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது. இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அசோக் நகர், கே.கே நகர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதே போல் தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி போன்ற சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. சென்னையை அடுத்த தாம்பரம், வண்டலூர், மீனம்பாக்கம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், திருவதிகை உட்பட பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தர்மபுரி மாவட்டம், அரூர், பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம், மங்கலமேடு, சின்னாறு, மேட்டுப்பாளையம், அனுகூர், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.