வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி கோவை மற்றும் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாககவும். தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு பெய்யும்.
மேலும் வரும் 22, 23-ம் தேதிகளில் நெல்லை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகமான பனி பொழிவு இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் திருமங்கலத்தில் அதிகபட்சமாக மழை பெய்துள்ளது.