Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெட்ரோ ரயில்: இந்த தினம் மட்டும் நேரம் மாற்றம்- முக்கிய அறிவிப்பு!

சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2 ஆம் தேதி அன்று காலை 5.30   மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறை தளர்வை தொடர்ந்து  சென்னையில் மெட்ரோ ரயில்  காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை இயக்கப்படுகிறது. இந்தநிலையில் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 29ஆம் தேதி மட்டும் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

விடுமுறை முடிந்து திரும்பி வரும் மக்கள் பயணிக்க வசதியாக வரும் 2ம் தேதி மட்டும் காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |