சென்னையில் நடமாடும் வாகனங்களில் விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் மருந்தகங்கள் மட்டும் திறந்து இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. மேலும் மக்களுக்கு தேவையான காய்கறிகளை நடை வண்டிகள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடமாடும் காய்கறி வாகனத்தில் விற்கப்படும் காய்கறிகளின் விலை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஒரு கிலோ தக்காளி – 15 ரூபாய், உருளைக்கிழங்கு – 25 ரூபாய், பெரிய வெங்காயம் – 30 ரூபாய், முட்டைக்கோஸ் – 15 ரூபாய், பீன்ஸ் – 100 ரூபாய், அவரைக்காய் – 80 ரூபாய், கேரட்- 40 ரூபாய், முள்ளங்கி – 30 ரூபாய், வெண்டைக்காய் – 50 ரூபாய், முருங்கைக்காய் – 40 ரூபாய், பீட்ரூட் – 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.