Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

8,000யை நெருங்கும் சென்னை…! இன்று ஒரே நாளில் 552 பேர் பாதிப்பு …!!

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,500யை கடந்துள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உலகிற்கே பெருந்தொற்றாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக ஒவ்வொரு நாளும் மூவாயிரம், நாலாயிரம் என்ற அளவில் உயர்ந்து கொண்டு வருவது மத்திய அரசுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நேற்று 4ஆவது ஊரடங்கு தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 1,00,000யை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

முக்கிய நகரங்களான மகராஷ்டிரா, டெல்லி, சென்னை போன்றவை கொரோனாவின் மையமாக விளங்குகின்றது . தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக எதிர்பார்க்காத அளவுவுக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று வரை கொரோனா பாதிப்பு 11,760 என உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் மட்டும் 7,125 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக திருவாரூர், கடலூர், அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு கொரோனா அதிகளவு பரவியது.

இந்த நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 552 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அங்கு மட்டும் 7,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 7466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல இன்று ஒரே நாளில் 489 பேர்  குணமடைந்துள்ளதால் மொத்த எண்ணிக்கை 4,895ஆக உயர்ந்துள்ளது. மரணம் அடைந்ததால் பலியானோர் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |