நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனை தொடர்ந்து கூடலூர் பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்ட வில்லை. இந்த நிலையில் இன்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 17,728ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.