Categories
மாநில செய்திகள்

சென்னை போர்ட் ஆலையை வாங்க டாடா பேச்சுவார்த்தை…. வெளியான தகவல்….!!!!

சென்னையில் அருகிலுள்ள மறைமலைநகரில் போர்டு கார் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. அந்நிறுவனம் சென்னையில் உள்ள ஆலையத்தில் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரும் முதல்வர் வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார்கள்.

டாடா நிறுவனம் போர்டு நிறுவனத்தை வாங்குவது குறித்து முதல் கட்ட ஆலோசனை என்று கருதப்படுகிறது. இந்த ஆலோசனையில் டாடா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரானிக்ஸ் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு ஆலை கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மற்றும் சென்னையில் உள்ள டிசிஎஸ் நிறுவனம் சிறுசேரியிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்று தகவல் வந்துள்ளது.

Categories

Tech |