Categories
மாநில செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பங்களாதேஷை சேர்ந்த முதியவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் தமிழகத்திற்கு வருகை தந்தார். இதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனா வைரஸால் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்னர். நேற்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,134 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |