Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்……!!

சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்து ஆடி வருகின்றது.

IPL 5 ஆவது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடியாது. டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். டெல்லி அணியில் ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடாத நிலையில் டெல்லி கேப்பிடல் அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. அதிகபட்சமாக ஷிகார் தவான்  51 ரன் எடுத்தார் .சென்னை அணியில் சார்பில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்

பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு   தொடக்கமுதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் அம்பத்தி ராயுடு இஷாந்த் சர்மா பந்து வீச்சில் 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ரெய்னாவும்,  சேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ரன் சேர்த்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சேன்வாட்சன் 44  ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து ரெய்னாவும் 30 ரன்னில் நடையை காட்டினார். சென்னை அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன் எடுத்துள்ளது .அந்த அணியின் கேதார் ஜாதவ் 24* , தோனி 15* ரன்னுடன் களத்தில் உள்ளனர். டெல்லி அணி சார்பில் அமித் மிஸ்ரா அதிகப்பட்சமாக 2 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

Categories

Tech |