Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் கிடுபிடி விசாரணை …!!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுமானப் பிரிவு தலைமை செயற்பொறியாளர் கண்ணன். உயர் அதிகாரியான கண்ணனின் சொந்த ஊர் மதுரை. ஆனால் அவர் சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி கீழ்ப்பாக்கத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் மகேஸ்வரி என்ற பெண் இடைத்தரகர் மூலமாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதனால் அவரை நேற்று காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும் அச்சிறுமியை வேறு யாராவது பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்களா என்று கண்டறிய கண்ணனை மேலும் விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரை 22 நபர்கள் கைதாகியுள்ளனர். மேலும் இவ்வழக்கில் யாராவது சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |