Categories
கிரிக்கெட் விளையாட்டு

சதத்தை தவறவிட்ட டு பிளெஸி…. சென்னை அணி 170 ரன்கள் குவிப்பு!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்துள்ளது. 

ஐ.பி.எல் 55 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்   அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதையடுத்து சென்னை அணியில் பாப் டு பிளெஸியும், சேன் வாட்சனும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே டு பிளெஸி அதிரடி காட்டினார். ஆனால் வாட்சன் 7 ரன்னில் ஏமாற்றமளித்தார்.

Imageஇதையடுத்து ரெய்னாவும், டு பிளெஸியூம் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை கடந்தது. இருவரும் அரைசதம் விளாசினார். குறிப்பாக டு பிளெஸி சதத்தை நோக்கி சென்றார்.  அதன் பிறகு ரெய்னா 38 பந்துகளில் 53 ரன்கள் (5 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார்.  அதன் பின் தோனி களமிறங்கினார்.

Image

அதை தொடர்ந்து அதிரடியாக அதிரடியாக விளையாடி வந்த டு பிளெஸியும் 55 பந்துகளில் 96 ரன்கள் (10 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசி ஆட்டமிழந்தார். மொஹம்மது சமியின் கடைசி ஓவரில்  அம்பத்தி ராயுடு 1, கேதார் ஜாதவ் 0 என ஆட்டமிழந்து  ஏமாற்றமளித்தனர். அந்த ஓவரில் சென்னை அணி 4 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Image

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில்  5 விக்கெட் இழந்து 170 ரன்கள் குவித்தது. தோனி 10 ரன்களும், ப்ராவோ 1 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், மொஹம்மது சமி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 171 ரன்கள் இலக்கை நோக்கி  பஞ்சாப் அணியின் தொடக்க கே.எல் ராகுலும், கிறிஸ் கெய்லும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |