Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரெய்னா, தோனி அதிரடி… டெல்லிக்கு 180 ரன்கள் இலக்கு!!

சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்துள்ளது  

ஐ.பி.எல் 50 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம்  ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி  அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக பாப் டுபிலஸியும், சேன் வாட்சனும் களமிறங்கினர். சேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் சுஜித் பந்து வீச்சில் அக்சர் பட்டேல் வசம் பிடிபட்டார்.

Image

இதையடுத்து ரெய்னாவும், டுபிலஸியும் ஜோடி சேர்ந்தனர். ரெய்னா அதிரடியாக விளையாட டுபிலஸி பொறுப்புடன் விளையாடி வந்தனர். இதையடுத்து   டூபிலெஸ்சி 39 (41) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 13.3 ஓவரில் 87/2 ரன்கள் இருந்தது. அதை தொடர்ந்து அதிரடியாக விளையாடி கொண்டிருந்த ரெய்னா 37 பந்துகளில் 59 ரன்களில்  (8 பவுண்டரி, 1 சிக்ஸர்) ஆட்டமிழந்தார்.

Image

அதன் பின் தோனியும், ஜடேஜாவும் இணைந்தனர். இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடினர். இதையடுத்து அதிரடியாக விளையாடிய ஜடேஜா  25 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு தோனி அதிரடி காட்டினார். தோனி ஆட்டத்தின் கடைசி 2 பந்தில் 2 சிக்ஸர் அடிக்க 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.

Image

கேப்டன் தோனி 22 பந்துகள் 44* ரன்களுடனும்  (3 சிக்ஸர் 4 பவுண்டரி), ராயுடு 5* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் சுஜித் 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், அக்சர் பட்டேல் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து டெல்லி அணி 180 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியது. தற்போது டெல்லி அணி 8 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 67 ரன்களுடன் விளையாடி வருகிறது.

Categories

Tech |